கொரோனாவை தடுக்கவில்லை எனில், 3.8 லட்சம் இறப்புகள் ஏற்படும் என எச்சரித்தது

பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கான கூட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன. சொந்த நாட்டு விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளையே காது கொடுத்து கேட்கவில்லை. நடுவில் 12 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது கர்ப்பிணி காதலியை கவனிப்பதற்காக சென்றுவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பைன் 'பார்ட் டைம் பிரதமர்' என விமர்சித்தார். பிப்ரவரி 26-ம் தேதி, வல்லுநர் குழு அளித்த அறிக்கையில், துரித நடவடிக்கை எடுத்து கொரோனாவை தடுக்கவில்லை எனில், 3.8 லட்சம் இறப்புகள் ஏற்படும் என எச்சரித்தது.

உடனடியாக 4 வாரத்திற்கு ஊரடங்கை அமல்படுத்தவும் அதில் வலியுறுத்தப்பட்டது. பிறகு மார்ச் 2-ம் தேதி கொரோனா வைரஸ் தொடர்பான முதல் கூட்டத்தில் பிரதமர் போரிஸ் பங்கேற்றார். அப்போது இங்கிலாந்தில் மூன்று டஜன் நபர்களுக்கு கொரோனா பரவிவிட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வைரஸ் வேகமாக பரவி, உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து ஆகிவிட்டது.” என அதில் கூறியுள்ளனர்.